உடுமலை,அக்.14: கொழுமம் ஊராட்சி அலுவலகம் அருகே சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உள்ளது. இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், குடிநீர் தொட்டி அருகே கழிவுகளை குவித்து வைத்துள்ளனர்.
அருகில் செல்லும் சாக்கடை கால்வாயை தூர் வாரி அருகில் குவித்து வைத்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் குடிநீர் எடுக்க செல்ல முடியவில்லை. குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே, இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


