அவிநாசி,அக்.14: அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையத்தில் அன்னூர் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் அவிநாசி போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த வாலிபரிடம் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது.விசாரணையில், பீகார் மாநிலம் சுகபவன்பூரைச் சேர்ந்த சுபாஷ்ஷா(25) என்பதும், அவிநாசி அருகே நம்பியாம்பாளையம் ஊராட்சி சுண்டக்காம்பாளையம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, சுபாஷ்ஷாவை கைது செய்து அவரிடமிருந்த 4.600 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.


