வெள்ளக்கோவில்,அக்.14: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அடுத்துள்ள கம்பளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கு சொந்தமான குளத்தோட்டம் பகுதியில் 50 வயது மதிக்க தக்க ஆண் சடலம் மரத்தில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளது. இதையடுத்து அருகில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரோத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பினர். இறந்தவர் யார்? எதற்காக வனப்பகுதிக்குள் சென்றார் என்பது குறித்த விபரம் தெரியவில்லை. இறந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் வெள்ளக்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


