கொங்கணகிரி முருகன் கோயிலில் ரூ.4.19 லட்சம் உண்டியல் காணிக்கை
திருப்பூர், நவ. 13: திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள கொங்கணகிரி கந்தபெருமான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை செயல்அலுவலர், அறநிலையத்துறை சரக ஆய்வாளர், அறங்காவலர்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
இதில், ரூ.4 லட்சத்து 19 ஆயிரத்து 777 ரொக்கப்பணம், வேல், சிறிய அளவிலான சிலை என வெள்ளி பொருட்கள் 265.650 மில்லி கிராம், தங்கம் 33.20 மில்லி கிராம் காணிக்கையாக கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் அலுவலர்கள், ஊழியர்கள், பக்தர்கள் பங்கு பெற்றனர். நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மீக ஈடுபாடு உடைய 4 தம்பதியர்களுக்கு கோயில் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.