உடுமலை, செப். 11: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மறுசீரமைப்பு திட்டம் 2வின் கீழ் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டதையொட்டி, நகர, ஒன்றிய அளவில் மண்டல தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிளை தேர்வு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் உடுமலையில் நடந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மண்டல பார்வையாளர் தணிகாசலம், மாவட்ட பார்வையாளர் சங்கர் ஆகியோர் ஆய்வு நடத்தினர். மாவட்ட தலைவர் கிட்டுச்சாமி தலைமை வகித்தார். தென்னரசு, கோவிந்தராஜ், செந்தில், ரவி மற்றும் நகர, வட்டார தலைவர்கள் கலந்து கொண்டனர்.


