தாராபுரம், செப். 11: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்.6ம் தேதி நடைபெற உள்ளது இந்நிலையில், தவெக வேட்பாளராக சத்தியபாமா அறிவிக்கப்பட்டுள்ளார். தாராபுரம் தொகுதியின் வேட்பாளராக மீண்டும் சத்தியபாமா அறிவிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் தவெக நகரச்செயலாளர்கள் அபுதாஹிர், பார்த்திபன், சாமுவேல், மாவட்ட வணிகரணி மாவட்ட அமைப்பாளர் ஜாபர் சாதிக் ஆகியோர் தலைமையில், நகராட்சி கவுன்சிலர் நாகராஜ், 17-வது வார்டு அமைப்பாளர் சையது பாஷா, 29வது வார்டு அமைப்பாளர் தங்கநாயகி பெரியசாமி, ஆகியோர் முன்னிலையில் தவெக தொண்டர்கள் கட்சி அலுவலகம் முன்பும் தாராபுரம் அண்ணா சிலை முன்பு திரண்டு வந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்
+
Advertisement


