வெள்ளக்கோவில்,அக்.10: வெள்ளக்கோவில் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளில் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் தூய்மை பணியாளர்கள் மூலம் உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு இயந்திரங்கள் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுகளாக மாற்றப்பட்டு மறு சூழ்ச்சி பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த ஒரு மாதமாக சேகரிக்கப்பட்ட 8 டன் பிளாஸ்டிக் கழிவுகள் விஜயமங்கலம் பகுதியில் இயங்கி வரும் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. பொதுமக்கள் தங்களது வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டக்கூடாது. அவற்றை தனித்தனியே தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


