Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பள்ளி வாகனம் மோதி அரசு பள்ளி மாணவன் படுகாயம்

அவிநாசி, ஜன. 10: அவிநாசி அருகே பச்சாம்பாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ். இவரது மகன் கதிர்அரசு (10). இவர், அவிநாசி அரசு பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை அவிநாசி ரங்காநகர் பகுதியில் ரோட்டோரமாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வாகனம், சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில், கதிர்அரசு தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அணைப்புதூரில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.