திருப்பூர், அக்.8: பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 மருத்துவ படியை ரத்து செய்ததை கண்டித்து, திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் ஓய்வூதியர்கள் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிஎஸ்என்எல் நிர்வாகம் இதுவரை வழங்கி வந்த மருத்துவ படியை ரத்து செய்துள்ளதை கண்டித்தும், தொடர்ந்து அதனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஓய்வூதிய சங்க நிர்வாகி அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் பழனிவேல்சாமி, சுப்பிரமணியம் மற்றும் கணேசன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.


