திருப்பூர், அக்.8: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழாவினை முன்னிட்டு மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்குக் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கி, கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், பேராசிரியர் செங்கமுத்து பங்கேற்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு உரையாற்றினார். இதில் திரளான நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இந்தியவாறு கல்லூரி சாலையில் பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


