அவிநாசி, செப்.9: அவிநாசி அருகே பெருமாநல்லூரில் செயல்பட்டு வரும் கே.எம்.சி பப்ளிக் பள்ளியின் 18ம் ஆண்டு விளையாட்டு விழா நேற்று நடந்தது. பள்ளியின் தலைவர் சண்முகம், லோகநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் மனோகரன் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் திருப்பூர் மாவட்ட தனியார் பள்ளிகளின் மாவட்டக்கல்வி அலுவலர் மணிமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். பள்ளியின் விளையாட்டுத்துறை செயலர் மாணவி நேத்ரா வரவேற்றார். பள்ளித் தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா வாழ்த்திப் பாராட்டினார். பல்வேறு போட்டிகளில் அதிக வெற்றிப்புள்ளிகள் பெற்று முதல் பரிசு பெற்ற க்ரோனாஸ் அணி மாணவர்களுக்கு பரிசுக்கோப்பை, சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


