Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

மடத்துக்குளம் தொகுதியில் 2வது முறையாக திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் வெற்றி

திருப்பூர், மே 5: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஜெயராமகிருஷ்ணன், அதிமுக கூட்டணியில் அமமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சன்முகவேலு, தமிழக வெற்றி கழகம் சார்பில் திருமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் ராதாமணி, புதிய தமிழகம் கட்சி சார்பில் செந்தில்குமார் மட்டுமல்லாது 8 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 13 பேர் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியில் மொத்தமுள்ள 2,14,809 வாக்காளர்களில் கடந்த 23ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் ஆண்கள் 89,711 பேரும், பெண்கள் 96,755 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேரும் என 1,86,503 பேர் வாக்களித்தனர்.  பதிவான வாக்குகள் நேற்று திருப்பூர் பல்லடம் சாலை எல்ஆர்ஜி கல்லூரியில் எண்ணப்பட்டது. 1746 தபால் வாக்குகள் உட்பட மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 22 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

இதில் திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் 15,968 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் வருமாறு: ஜெயராமகிருஷ்ணன் (திமுக) -70,458. சண்முகவேலு (அமமுக) -54,490, திருமலை (தவெக) - 52,684. ராதாமணி (நாம் தமிழர்) -6,578, செந்தில்குமார் (புதிய தமிழகம்) -621 முகமது அலி (சுயே) -206, ஏ.சண்முகவேல் (சுயே) -120, கே.சண்முகவேல் (சுயே) -92, தங்கராஜ் (சுயே) -263, மகேந்திரன் (சுயே) -464, வடிவழகன் பாலாஜி (சுயே) -664, நோட்டா -911. 2016 சட்டமன்ற தேர்தலில் ஜெயராமகிருஷ்ணன் வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அவர் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரான சதிஷிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார்.