பல்லடம், ஆக. 28: பந்தல் முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, பிரதம மந்திரி ராஷ்டிரிய கிருஷி விகாஸ் திட்டத்தின் கீழ் நிரந்தர பந்தல் அமைக்க 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது. பாகல், புடலை, சுரைக்காய், கோவை, வெள்ளரி, பந்தல் அவரை, போல் பீன்ஸ் உள்ளிட்ட கொடி வகை காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் இத் திட்டத்தில் பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு பல்லடம் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
+
Advertisement



