Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு மாநகரில் பூட்டியே கிடக்கும்: புறக்காவல் நிலையங்கள்

திருப்பூர், மே 23: திருப்பூர் மாநகரில் உள்ள 24 புறக்காவல் நிலையங்களும் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். திருப்பூர் மாநகரில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர் பல இருக்கின்றனர். பொதுமக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியாக மாநகர் பகுதி இருப்பதால், இதனை பயன்படுத்தி சிலர் குற்றச்சம்பவங்களையும் நிகழ்த்தி வருகின்றனர். தனியாக வருகிறவர்களிடம் செல்போன் பறிப்பு, நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

இதுபோல் கஞ்சா, மது உள்ளிட்ட போதை ஆசாமிகள் ஆங்காங்கே தகராறுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் தினமும் போலீஸ் நிலையங்களுக்கு பல்வேறு புகார்களும் வந்து கொண்டிருக்கிறது. எனவே மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிற ஆசாமிகளை கண்டிக்கவும், பொதுமக்களுக்கு அவசர காலங்களில் புகார்கள் தெரிவிக்க ஏதுவாகவும் மாநகா் பகுதியில் புறக்காவல் நிலையங்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டது.