Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குமரன் நினைவகத்தை சுத்தம் செய்த தபால் ஊழியர்கள் விதைகள் ரக கலப்பில் விவசாயிக்கு கவனம் தேவை

பல்லடம், செப். 29: பல்லடம் வேளாண் அலுவலர் வளர்மதி கூறியதாவது:

நல் வித்தே நல் விளைச் சலுக்கு ஆதாரம் என்பார்கள். விதைகளை விவசாயத்தின் மூலதனமாக உள்ளது. விதைகள் தரமானவையாக இருக்க வேண்டும். ஒரே ரக விதைகள் ஒரே சமயத்தில் வளர்ச்சியடைந்து, பூத்து பழுதின்றி அதிக மகசூல் கொடுக்கிறது. விதைப்புக்கு பயன்படுத்தப்படும் விதைகளில், பிற ரக கலப்பு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால் அடுத்த பருவத்தில் பயன்படுத்தும் போது, பூக்கும் பருவம், பயிர்களின் உயரம், அறுவடை காலம் ஆகியவை மாறுபடும். பிற ரகம் கலந்த விதைகளை விதைப்பதால், நோய் தடுப்பு, செலவு அதிகரிப்பதுடன், விதைகளின் தரத்துடன், நிகர மகசூல் குறையும்.

ஒரே ரக விதைகள் விளைவதற்கு ஏற்றது. பிற ரக விதைகள் கலந்து இருந்தால், விதைகளின் பாரம்பரிய சுத்தம் பாதிக்கப்படும். கலப்பு விதை களை பார்த்து, பிரித்து அகற்றுவதால் மகசூல் மற்றும் தரத்தை அதிகரிக்கலாம். விதைகளில், பிற ரகங்கள் கலந்துள்ளதா என்பதை நுண்ணோக்கி மூலம் கண்காணித்து, ரகங்களின் குண நலன்களை கருத்தில் கொண்டு கலப்பு ரகங்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. எனவே, விதை குவியலை பெரும் விவசாயிகள், விதை மாதிரிகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதிக மகசூல் பெற, விதை பரிசோதனை மிக அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர், செப். 29: இந்திய அஞ்சல் துறையின் சார்பில் தூய்மையே சேவை பிரசார இயக்கத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 17ம் தேதி முதல் வருகிற 2ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்தில் தூய்மைபடுத்தும் பணி திருப்பூர் அஞ்சல் கோட்டம் சார்பாக நடந்தது. இதனை கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் தொடங்கி வைத்தார். தலைமை அஞ்சல் அலுவலர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். கோட்ட ஆய்வாளர் சித்தாஞ்சன்குமார் தலைமையில் ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.