திருப்பூர், அக்.22: திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி என்பவரது மனைவி ராமாத்தாள். இவர் அந்த பகுதியில் குடிசை வீடு அமைத்து வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையினால் குடிசை வீடு முழுவதும் இடிந்து விழுந்து விட்டது. இதில் யாருக்கும் காயங்களோ? உயிர் சேதங்களோ கால்நடைகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. குடிசை வீடு இடிந்த ராமத்தாளுக்கு வருவாய்த்துறை வழங்கும் நிவாரணத் தொகை ரூ. 8ஆயிரம் வழங்கப்பட்டது. இதனை வடக்கு தாசில்தார் மகேஸ்வரன் வழங்கினார்.
+
Advertisement


