Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொங்கலூரில் டெங்கு தடுப்பு வழிமுறை விளக்க கூட்டம்

பல்லடம்,ஜூலை31: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் அரசின் பொது சுகாதார துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு வழிமுறைகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை இயக்குபவர்களுக்கான குளோரினேசன் பற்றிய செயல்முறை விளக்க கூட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள், சிகிச்சை முறைகள், தடுப்பு வழிமுறைகள் பற்றி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரவேல், பொங்கலூர் மருத்துவ அலுவலர் டாக்டரி சாம்பால் ஆகியோர் விளக்கி பேசினர்.

குடிநீர் விநியோகத்தில் செய்யப்படும் குளோரினேசன் செயல்முறை விளக்கம் பற்றி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கந்தசாமி விளக்கி பேசினார்.இக்கூட்டத்தில் பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலுசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் கலந்துக்கொண்டனர்.