Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது

அவிநாசி, ஜூலை 30: அவிநாசியில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவிநாசி வள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் வினோத்குமார் (36). இவர், நேற்று மதியம் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த போது, மர்ம நபர் ஒருவர் வீட்டின் கதவை திறக்க முயன்று கொண்டிருந்தார். வினோத்குமார் உடனடியாக திருடன், திருடன் என சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரை பிடித்து காவல் நிலையத்துக்கு தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவிநாசி சந்தைப்பேட்டை அருகில் வசித்து வரும் சின்னத்தம்பி மகன் உதயகோபால்ராஜா (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.