Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அடிப்படை வசதி கேட்டு மாதர் சங்கம் மனு

அவிநாசி, ஜூலை 30: அவிநாசி ஒன்றியம், சின்னேரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அபிராமி கார்டன் பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் தினமும் குடிநீர் திறந்துவிடும் பணியை ஊராட்சி நிர்வாகம் நேரடியாகத் தலையிட்டு, குடிநீர் திறந்து விட நிரந்தரப் பணியாளரை நியமித்து ஊதியம் வழங்க வேண்டும். மேலும் பழுதடைந்த ரோட்டை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். கழிவுநீர் தடையின்றி வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல அருகில் உள்ள ருக்மணி கார்டன், அம்மன் நகருக்கு அடிபடை வசதிகளை செய்து தர வேண்டும் என நேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இந்நிகழ்ச்சியில் மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கவுரிமணி, ஒன்றியத்தலைவர் சித்ரா, துணைச்செயலாளர் தேவி, மாதர்சங்க கிளைச்செயலாளர் கலைச்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.