Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச வாலிபர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை

திருப்பூர், ஜூன் 30: திருப்பூர் முத்தனம்பாளையம் அங்காளம்மன் நகரில் கடந்த 24.6.2025 அன்று நல்லூர் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கே சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த கபீர் ஹோசன்(36) மற்றும் கோகோன்(47) ஆகியோரை விசாரித்ததில், அவர்கள் முறையான ஆவணங்களும் இன்றி வங்கதேச நாட்டிலிருந்து திருப்பூர் வந்து தங்கி வேலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு திருப்பூர் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய கபீர் ஹோசன், கோகோன் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் பூமதி ஆஜராகி வாதாடினார்.