Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஒப்பந்த முறை பணி நியமன அரசாணையை திரும்ப பெறக் கோரி செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்தனர்

திருப்பூர்,செப்.29: தமிழ்நாட்டில் செவிலியர் பணி நியமனங்களை 11 மாத தற்காலிக ஒப்பந்த முறையில் நிரப்புவது மற்றும் புதிதாகத் தொடங்கப்பட்ட செவிலியர் கல்லூரிகளில் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது தொடர்பான அரசாணையைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் செவிலியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாகத் தேர்வு செய்யப்படாமல், மாவட்ட கலெக்டர் மூலம் தற்காலிகமாக செவிலியர்களை நியமிக்கும் முடிவு செவிலியர்களின் எதிர்காலத்தையும், அரசு மருத்துவக் கட்டமைப்பையும் பாதிக்கும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரமாக்குவோம் என்ற வாக்குறுதி அளித்த தமிழக வெற்றிக்கழக அரசு அதற்கு மாறாக யாரும் நிரந்தர அரசு வேலையில் இருக்கவே கூடாது என்ற முடிவில் அரசாணையை பிறப்பித்துள்ளது. மாற்றத்திற்காக வாக்களித்த நிலையில் ஏமாற்றத்தை பரிசாக வழங்கியுள்ளது. எனவே இதனை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்த செவிலியர்கள் இன்றும் கருப்பு பட்டை அணிந்தவாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கு தங்கள் கோரிக்கைகளை மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக நாளை சென்னையில் மாநில அளவிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், அரசு கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் அடுத்தகட்ட தீவிர போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் செவிலியர்கள் தெரிவித்தனர்.