திருப்பூர்,செப்.29: திருப்பூரில் மிக முக்கியமான சாலைகளில் ஒன்று அங்கேரிபாளையம் ரோடு. இந்த ரோட்டின் வழியாக தினசரி பஸ்கள், லாரிகள், கார்கள் சென்று வருகிறது. மேலும் இந்த ரோட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில் அந்த அங்கேரிபாளையம் ரோட்டின் இரண்டு புறமும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் ரோட்டோர கடைகள் ஆகியவை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இது போன்ற ஆக்கிரமிப்புகளால் அங்கேரிபாளையம் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் அங்கேரிபாளையம் ரோட்டில் ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் நேற்று அங்கரிபாளையம் முதல் வெங்கமேடு வரை ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் உதவியோடு அகற்றினர். இதில் உதவி கோட்ட பொறியாளர் கவிதா உதவி பொறியாளர் வனஜா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அனுப்பர்பாளையம் போலீசார் கலந்து கொண்டனர்.


