கோபி, ஆக.29: ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்தின் ஒரு அங்கமான சக்திதேவி அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் சக்தி சிறப்புப்பள்ளி மற்றும் மறுவாழ்வு மையத்தில் பயிற்சி பெறும் சுமார் 100 சிறப்பு குழந்தைகளின் மனமகிழ்ச்சிக்காகவும், புதிய இடங்களை அறிந்துகொள்ளும் பொருட்டும் மற்றும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் பெருந்துறை அருகில் உள்ள ‘சில்-அவுட்’ தீம்பார்க்கிற்கு இன்பச்சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு பலவிதமான விளையாட்டுகளில் இக்குழந்தைகள் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர். இக் குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மொத்தம் 250 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



