Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஸ்ரீ சாய் சிந்து செவிலியர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

கோபி, ஆக.29: கோபி அருகே கொளப்பலூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சாய் சிந்து செவிலியர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மாணவர்களுடன் இணைந்து நடன நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் பூக்கோலம் போட்டிகள் நடைபெற்றன. கல்லூரியின் துணைத் தலைவர் கிஷோர் ரவிச்சந்திரன் ஓணம் பண்டிகை பற்றி சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் மீனாட்சி ரவிச்சந்திரன், துணைச்செயலர் சாரு ரூபா கிஷோர் மற்றும் ஈரோடு சட்டக் கல்லூரியின் துணைத்தலைவர் காயத்ரி ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

மாணவிகள் ஆதிரா பிரவீன், அபயா புஜ்ஜி, ஜோதிப்பிரியா, சம்யுக்தா, ஆதியோர் மகாபலி மன்னனாகவும், மலையாள மங்கை, வாமணன் வேடம் அணிந்து வந்தனர். அதைத்தொடர்ந்து நடனம், புலியாட்டம், அத்தப்பூ கோலப்போட்டி, கயிறு இழுத்தல், உறி அடித்தல் மற்றும் சுந்தரிக்கு பொட்டிடுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக கல்லூரி முதல்வர் விமலா வரவேற்றார். முடிவில் நிர்வாக அலுவலர் பிரபு நன்றி கூறினார்.