Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

15 வயது சிறுமி கர்ப்பம்: பெயிண்டர் மீது குண்டாஸ்

கோபி, ஆக.29: சிறுமியை கர்ப்பிணியாக்கிய பெயிண்டர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். நம்பியூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் வீட்டின் அருகே பெயிண்டிங் வேலைக்காக வந்த கடத்தூரை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் வெள்ளியங்கிரி (37) என்பவர், சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து சிறுமியின் வாயை பொத்தி, பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்று உள்ளார். இந்நிலையில் சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை வைத்து அவரது தாய் விசாரணை செய்த போது, பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து சிறுமி கண்ணீருடன் கூறி உள்ளார். தொடர்ந்து சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தபோது, 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 29ம் தேதி ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ஜாஸ்மின் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் வெள்ளியங்கிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வெள்ளியங்கிரியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் கந்தசாமி, வெள்ளியங்கிரியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கோபியில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த வெள்ளியங்கிரி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.