Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செல்லாண்டியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

திருப்பூர்,ஜூலை29: திருப்பூர் நொய்யல் நதிக்கரையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயிலில் 20வது ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 24ம் தேதி தொடங்கியது. இதனை முன்னிட்டு 24ம் தேதி டவுன் மாரியம்மன் கோயிலில் இருந்து பூவோடு எடுத்து வரப்பட்டது. 25ம் தேதி சிறப்பு அலங்காரம் 26ம் தேதி சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை குண்டம் திறப்பு நடந்தது. பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதன் பின்னர் பூசாரி ெதாடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.