Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்,செப்.26: 3வது ஊதிய மாற்றத்தை உடனே வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் அனைத்து சங்கங்களின் சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க நிர்வாகி குமரவேல் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் முகமது ஜாபர், பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க நிர்வாகி கணேசன், ஓய்வூதியர் சங்க பல்லடம் கிளைச் செயலாளர் ஜெயராஜ், அவிநாசி கிளை செயலாளர் கணேசன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவிச் செயலாளர் அருண்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் 3வது ஊதிய மாற்றத்தை உடனே வழங்க வேண்டும். காலதாமதம் செய்வதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.