Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருப்பூர் மாவட்டத்தில் 7 தாசில்தார்கள் பணியிடமாற்றம்

திருப்பூர், ஆக.26: திருப்பூர் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி 7 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் வடக்கு தாசில்தாராக இருந்த கண்ணாமணி மாவட்ட வழங்கல் அதிகாரியின் நேர்முக உதவியாளராகவும், மாவட்ட வழங்கல் அதிகாரியின் நேர்முக உதவியாளராக இருந்த கனிமொழி திருப்பூர் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கிடங்கு மேலாளராகவும், திருப்பூர் மாநில வாணிப கழகத்தின் கிடங்கு மேலாளராக இருந்த பாபு திருப்பூர் வடக்கு குடிமைப் பொருள் தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் வடக்கு குடிமைப்பொருள் தனி தாசில்தாராக இருந்த சரவணன் திருப்பூர் கலெக்டர் அலுவலக மேலாளராகவும் (பொது), திருப்பூர் கலெக்டர் அலுவலக மேலாளராக (பொது) இருந்த மகேஸ்வரன் மாவட்ட வழங்கல் பறக்கும் படை தனி தாசில்தாராகவும்,

மாவட்ட வழங்கல் பறக்கும்படை தனி தாசில்தாராக இருந்த சபரிகிரி பல்லடம் தாசில்தாராகவும், பல்லடம் தாசில்தாராக இருந்த கோவிந்தசாமி திருப்பூர் வடக்கு தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஊத்துக்குளி மண்டல துணை தாசில்தாராக உள்ள சரவணக்குமார் ஊத்துக்குளி தேர்தல் தனி தாசில்தாராக கூடுதல் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் கிடங்கு உதவி மேலாளராக இருந்த கலாவாணி காங்கயம் தேர்தல் துணை தாசில்தாராகவும், காங்கயம் தேர்தல் துணை தாசில்தாராக இருந்த வசந்தா திருப்பூர் கிடங்கு உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் மனிஷ் பிறப்பித்துள்ளார்.