திருப்பூர், ஆக. 26: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 28ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் வளாக அறை எண் 240 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெறவுள்ளது. இதில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்களை வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம், தங்களது கோரிக்கைகளை தொகுத்து நேரடியாக தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டது.
+
Advertisement



