பல்லடம், ஆக. 28: பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பாச்சாங்காட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள குட்டை மாசடைந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நேற்று மொபட்டில் கோழிக்கழிவுகளை கொண்டு வந்த வாலிபர், குட்டையில் கொட்டியபோது அந்த பகுதி பொதுமக்கள் கையும் களவுமாக பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களை கண்டதும், வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினார். மொபட் ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. குட்டையை சுற்றி வேலி அமைத்து பாதுகாக்கவும், நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தினர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
+
Advertisement



