திருப்பூர்,செப்.25: திருப்பூர் ஐ.கே.எப் வளாகத்தில் பெங்களூரு எஸ்.எஸ். டெக்ஸ்டைல் சார்பில் யான்நெக்ஸ், டெக்ஸ் இந்தியா, அப்பேரல் சோர்சிங் பேர் மற்றும் டைசெம் டெக்ஸ் பிரசாசஸ் ஜவுளி வணிக கண்காட்சி நடக்கிறது. நேற்று காலை நடந்த இதன் தொடக்க விழாவில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நிட்மா சங்க தலைவர் அகில் ரத்தினசாமி,செயலாளர் ராஜாமணி, திருப்பூர் நூல் வியாபாரிகள் சங்க தலைவர் முருகேசன், கண்காட்சி ஏற்பாட்டாளர் கிருஷ்ணமூர்த்தி என பலர் கலந்து கொண்டனர்.கண்காட்சியில் , ஜாப் ஒர்க் நிறுவனங்கள், ஓ.இ.எம். உற்பத்தியாளர்கள், தனிப்பயன் ஆடை உற்பத்தியாளர்கள், ஒப்பந்த உற்பத்தியாளர்கள், தனியார் லேபிள், ஒயிட் லேபிள் உற்பத்தியாளர்கள் 337 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.


