Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

கணக்கம் பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க கோரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

அவிநாசி,செப்.25: அவிநாசி அருகே கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வருவதில்லை இது குறித்து பலமுறை கூறியும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் காந்திநகர் பகுதி பொதுமக்கள்,பெண்கள்,ஏராளமானோர் திரண்டு வந்து கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வினோலியா ஜூலியட் ராணி விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வழக்கம்போல தண்ணீர் வருகின்ற ஆத்துபாலம் பகுதியில் உள்ள பிரதான குழாய் பைப் லைன் உடைந்து விட்டதாகவும், இதனால் தண்ணீர் வினியோகம் தடைபட்டுள்ளது என்றும், உடனடியாக பைப்லைன் உடைப்பை சரி செய்து, சீரான குடிநீர் வசதியை வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.