Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

மருந்து வணிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

அவிநாசி,செப்.25: அவிநாசி வட்டார மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தலைவர் பழனிசாமி தலைமையில் அவிநாசியில் நடைபெற்றது. கூட்டத்தில்,உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் ஸ்டாலின் பிரபு,திருப்பூர் சரகம் மருந்து ஆய்வாளர் ராமசாமி ஆகியோர் பங்கேற்று, சட்ட விதிகளுக்கு உட்பட்டு மருந்து வணிகம் செய்வது குறித்து விளக்கினர்.

தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் அவிநாசி வட்டார மருந்து வணிகர்கள் சங்க தலைவராக ஈஸ்வரன்,செயலாளராக ஜோதி பிரகாஷ், பொருளாளராக செல்வராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை, அனைத்து வணிகர் சங்கத்தலைவர் முத்துக்குமரன்,மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் அசோகன், செயலாளர் லட்சுமணன்,பொருளாளர் சுந்தரம், அமைப்புச் செயலாளர் சமயநாதன், மருந்தாளுனர் சங்கத்தலைவர் யோகேஷ்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.