Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தெற்குபாளையத்தில் தூய்மை திருவிழா

பல்லடம், மே 25: பல்லடம் நகராட்சி சார்பில் வார்டு எண் 3 தெற்கு பாளையத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் தூய்மை திருவிழா நேற்று நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் (பொ) குமரன் தலைமை வகித்தார். இதில் திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தாணுமூர்த்தி, சுகாதார அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர்கள் சங்கர், சத்தியசுந்தரராஜ், தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர். இதில் குப்பை இல்லா பல்லடம் நகராட்சியாக உருவாக்க உறுதிமொழி ஏற்றனர்.