Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கள் இறக்கி விற்ற விவசாயி மீது வழக்கு

பல்லடம், ஜூன் 24: பல்லடம் ராயர்பாளையம் பகுதியில், கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பல்லடம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, பழனிசாமி என்ற விவசாயியின் தோட்டத்தில் தென்னை மரத்திலிருந்து கள் இறக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அதன்பேரில், பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடமிருந்து 6 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.