Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிணற்றில் விழுந்த ஆந்தை மீட்பு

திருப்பூர், மே 22: திருப்பூர் முருகம்பாளையம் பூந்தோட்டம் பகுதியில் செயல்படும் பனியன் நிறுவன வளாகத்தில் பழைய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் 20 அடி ஆழ தண்ணீரில் விழுந்த ஆந்தை ஒன்று வெளியேற முடியாமல் தத்தளித்தது. இது குறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி கிணற்றில் இறங்கி ஆந்தையை மீட்டனர். பின்னர், அதனை பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்திய கழுகு ஆந்தை என்ற அரிய வகையை சேர்ந்ததாகும். இதற்கு வங்காள கழுகு ஆந்தை அல்லது பாறை கழுகு ஆந்தை என்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் தலையில் கொம்புகள் போன்ற அமைப்பை கொண்டுள்ளது. பாறைப்பகுதிகள், புதர்காடுகள் மற்றும் விவசாய நிலங்களில் இவ்வகை ஆந்தைகள் வசிக்கின்றன. தற்போது மீட்கப்பட்டுள்ள ஆந்தைக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.