Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ரூ.11 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம்

வெள்ளக்கோவில். மே 22: வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சூரியகாந்தி விதை ஏலம் நடந்தது. இதில் இணங்கனூர் ஆத்தூர், மஞ்சனி, வெள்ளையூர், நாவலூர், மார்க்கம்பட்டி, பகுதிகளை சேர்ந்த 11 விவசாயிகள் 13 ஆயிரத்தி 914 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

வெள்ளகோவில், காங்கயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். அதிகபட்சமாக ஒருகிலோ சூரியகாந்தி விதை ரூ.83.38க்கும், குறைந்தபட்சமாக ரூ.73.62க்கும், ஏலம் போனது. மொத்தம் ரூ.11 லட்சத்துக்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட முதுநிலை செயலாளர் தெரிவித்தார்.