Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குப்பைகளை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு

திருப்பூர், ஆக. 20: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கே. செட்டிபாளையம் அரசு பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை மற்றும் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாடு குறித்து மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. இதில் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி மாணவ, மாணவிகளுக்கு ஈரக்கழிவு, மக்கும் கழிவு, உலர் கழிவு, மக்காத கழிவு, சுகாதார கழிவு, சிறப்பு கவனிப்பு கழிவு, வீட்டு அபாயகர கழிவு ஆகியவற்றை தரம் பிரித்து மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

தற்போது மழைக்காலமாக இருப்பதால் கொசுவினால் பரவும் நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், வீடுகளில் உள்ள தண்ணீரை மூடி வைக்கவும், வீட்டின் சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள தேங்காய் தொட்டிகள், டிரம்கள், பூந்தொட்டிகள், ஆட்டுக்கல், தேங்காய் ஓடு மற்றும் டயர்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மாணவ, மாணவிகள் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெறவும் அறிவுறுத்தப்பட்டது.