Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.4 லட்சத்துக்கு கருப்பட்டி ஏலம்

திருப்பூர்,மே20: குன்னத்தூரில், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி உற்பத்தியாளர் சம்மேளனம் செயல்பட்டு வருகின்றது. இங்கு நேற்று முன்தினம் தென்னங்கருப்பட்டி ஏலம் நடந்தது. இதில், 2,400 கிலோ தென்னங்கருப்பட்டி ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி கிலோ ரூ.165க்கு ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 96 ஆயிரத்திற்கு ஏலம் போனது. பனங்கருப்பட்டி 500 கிலோ கொண்டு வரப்பட்டது. இது கிலோ ரூ.200.50-க்கு ஏலம்போனது. அதன்படி பனங்கருப்பட்டி ரூ.1. லட்சத்தி 2 ஆயிரத்து 500க்கு ஏலம் போனது. இந்த தகவலை கூட்டுறவு விற்பனை சம்மேளன அதிகாரிகள்

கூறினார்.