Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்

உடுமலை, மே 19: உடுமலை மத்திய பேருந்து நிலையம் பின்புறம் பைபாஸ் சாலை செல்கிறது. இந்த சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.பொள்ளாச்சி, திருமூர்த்திமலை, அமராவதி நகர், மூணாறு, மறையூர், பழனி செல்லும் வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன.

இந்த சாலையில் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.

எந்த நேரத்திலும் உடைந்து உள்ளே விழலாம் என்ற நிலையில் உள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். வாகனம் செல்லும்போது உடைந்து விட்டால் பாதாள சாக்கடை குழிக்குள் விழும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக பாதாள சாக்கடை மூடியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடும்பத்துடன் நேரம் செலவிடுவது