திருப்பூர், ஆக. 18: திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள சிக்னல்களில் விளம்பர பதாகைகள் தொங்க விடப்பட்டுள்ளது. இந்த விளம்பர பதாகைகள் வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வந்தனர். இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரத்தினசாமி அனைத்து சிக்னலிலும் உள்ள விளம்பர பதாகைகளை 7 நாட்களுக்குள் அகற்ற உத்தரவிட்டுள்ளார்.
+
Advertisement



