Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பூரில் அதிகரிக்கும் போலி மேன்பவர் ஏஜென்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

திருப்பூர், ஜூன் 18: பின்னலாடை நகரமான திருப்பூரில் உள்ள ஆயிரக்கணக்கான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரிவதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான இளைஞர்களும், இளம் பெண்களும் வேலை தேடி வந்த வண்ணம் உள்ளனர். இவர்களை குறிவைத்து, திருப்பூரின் மாநகர பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் முறையான அரசு அனுமதி, உரிமம் இன்றி ஏராளமான போலி மேன்பவர் (ஆள் சேர்ப்பு) ஏஜென்சிகள் இயங்க தொடங்கி உள்ளன. திருப்பூர் வந்தால் பட்டப்படிப்பு இல்லையென்றாலும் ஏதேனும் வேலை பெற்று கொள்ளலாம் என வரும் இளைஞர்களிடம் இந்த நிறுவனங்கள், முன்னணி நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை, தங்குமிடம் மற்றும் உணவு இலவசம் என கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து வலை விரிக்கின்றன.