Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அதிகாரிகள் கவனக்குறைவால் வீணாகும் குடிநீர் டாஸ்மாக் ஊழியர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

அவிநாசி, மே 18: அவிநாசி பகுதியில் இயங்கும் டாஸ்மாக் ஊழியர்களிடம் அதிக விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி டிஎஸ்பி கனகசபாபதி உத்தரவின்பேரில், பெருமாநல்லூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் டாஸ்மாக் மதுக்கடையில் வேலை செய்யும் சூபர்வைசர்கள், சேல்ஸ்மேன் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதை முழுவதுமாக தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இரவு 10 மணிக்கு மேல் மொத்தமாக அதிக அளவு மது வாங்குபவர்கள் யாராக இருந்தாலும் போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும். என்றும், பாட்டிலுக்கு ரூ.10 வாங்கக்கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.