திருப்பூர், ஆக 17: சுதந்திர தின விழாவையொட்டி, திருப்பூரில் அமெச்சூர் கபடி கழகம் மற்றும் ஜெயசித்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தின. இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் வந்து பங்கேற்றனர். போட்டிகளை மாவட்ட கலெக்டர் மனிஷ், அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனும் தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழக பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 37 ஆண்கள் அணிகளும், 22 பெண்கள் அணிகளும் பங்கேற்று விளையாடுகின்றன.
போட்டியில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும், ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள சுழற்கோப்பையும், 2ம் பரிசாக ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசும், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள சுழற்கோப்பையும், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள சுழற்கோப்பையும் வழங்கப்பட உள்ளது.



