Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருப்பூர் ஜெய் சாரதா பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

திருப்பூர், ஜூலை 17: திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கோலாகலமாகக் கொண்டாடினர். பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் இ.வேலுசாமி தலைமையேற்று சிறப்புரையாற்றினார். பள்ளி அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகாவாணி சதீஷ் தலைமை தாங்கினார். பொருளாளர் சுருதி கரேஷ் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி முதல்வர் ஏ.எஸ் மணிமலர் முன்னிலை வகித்து, காமராஜரின் சுயநலம் இல்லா செயல்பாடுகள் பற்றி உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தாளாளர், ஏற்றத்தாழ்வின்றி மனித நேயத்தோடு உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து தொலைநோக்குப் பார்வையோடு உண்மையாக இருந்து தன்னுடைய கடமைகளை ஆற்றியதால்தான் கல்விக் கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் காலம் நூற்றாண்டுகள் கடந்தாலும் அவர் பிறந்த நாளை நாம் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் அவரை போன்ற உன்னதமான தலைவர்கள் நமது பள்ளியில் இருந்து தோன்ற வேண்டும், என்றார். பின்னர் செயலாளர், பொருளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காமராஜரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.ஆசிரியர் கவிதா வரவேற்புரையாற்றினார். மாணவர்களின் பரதநாட்டியம், பேச்சு, கவிதை, உரையாடல் என கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் வித்யா நன்றியுரை வழங்கினார்.