Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற தொழிலாளி கைது

திருப்பூர், ஜூன் 16: திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற தொழிலாளியை போலீசார் நேற்று கைது செய்தனர். திருப்பூர், காலேஜ் ரோடு அடுத்த காவிலிபாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் தெய்வானை (84). நான்கு மகன்கள் உள்ளனர்.கணவர் இறந்த நிலையில் மகன் மனோகருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி இரவு வீட்டில் மூதாட்டி தெய்வானை மட்டும் தனியாக இருந்தார். அப்போது, தெய்வானை வீட்டிற்குள் புகுந்த வாலிபர் ஒருவர் அவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து தெய்வானை கழுத்தில் அணிந்திருந்த 4.5 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்ப முயன்றார்.

அப்போது, தெய்வானை கூச்சலிட அந்த மர்மநபர் சங்கிலியை அங்கேயே வீசி விட்டு தப்பி சென்றார். இது குறித்து 15.வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு சோளிபாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்த் (46), என்பவரை நேற்று கைது செய்தனர்.