Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்திற்கு மாவட்டத்திற்கு 3 பயனாளிகள் தேர்வு

பல்லடம்,அக்.12: தமிழக அரசின் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டத்தில் மூன்று பயனாளிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் கோழிப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள், பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.இத்திட்டத்தின் கீழ், நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50 சதவீத மானியமும், கொட்டகை, தளவாடங்கள், தீவனச் செலவுகள் உள்ளிட்டவற்றுக்கு அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை பின்னேற்பு மானியமும் வழங்கப்படுகிறது.

மேலும், பயனாளிகளுக்கு நான்கு வார வயதுடைய 250 நாட்டுக்கோழிக் குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள நிலையில், மூன்று பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.கால்நடைத் துறை இணை இயக்குனர் இளங்கோ கூறுகையில், தற்போதைக்கு மூன்று பயனாளிகளுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.