Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருப்பூரில் ஆதார் சிறப்பு முகாம்; 2 நாட்களில் 418 பேர் பயனடைந்தனர்

திருப்பூர்,அக்.12: இந்திய தபால் துறை சார்பில் வாரம்தோறும் வார இறுதி விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்கள் ஆதார் சேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஆலங்காடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இரண்டு நாள் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என 2 நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் ஆதார் கார்டில் புகைப்படம் மாற்றம், செல்போன் எண் மற்றும் முகவரி மாற்றம் , கைரேகை பதிவு ,கண்விழி பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுக் கொண்டனர்.  இரண்டு நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமின் மூலம் 418 பேர் தங்கள் சேவைகளை பூர்த்தி செய்துள்ளதாக தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.