காங்கயம், டிச. 10: காங்கயத்தில் ஊர்க்காவல்படை அலுவலகம் இயங்கி வருகிறது. இதில், ஆண், பெண் என 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கிளை சிறையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும், கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் அலுவலக சுவர்கள், மேற்கூரைகள், ஓடுகள் அடிக்கடி உடைந்து விழுந்த வண்ணம் உள்ளதால் காவலர்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்த அலுவலகத்திற்கு மின் இணைப்பு 3 மாதத்திற்கு முன் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், புதிய அல்லது தற்காலிக கட்டிடத்தில் ஊர்க்காவல்படை அலுவலகத்தை மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
+
Advertisement


