தாராபுரம், டிச. 10: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை ஸ்மார்ட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அலங்கியம், நஞ்சியம்பாளையம், தொப்பம்பட்டி, மணக்கடவு, பொம்மநல்லூர், கோவிந்தாபுரம் உள்ளிட்ட 16 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார், மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் துரைசாமி, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெண்ணிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்டவழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ், செல்வகுமார் மற்றும் மோகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் ஏராளமான தூய்மை பணியாளர்களும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செய்திருந்தனர்.


